எஸ்எஸ்எல்சி யில் பாஸ் ஆன லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். சுந்தரபாண்டியன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். பின்னர் கும்கி, இப்போது வெளியாகியுள்ள குட்டிப்புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கைவசம் மேலும் ஆறு படங்களை வைத்துள்ளார். லட்சுமி மேனன் நடிக்க வந்தபோது 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த ஆண்டு அவர் பத்தாம் வகுப்புக்கு வீட்டிலிருந்து படித்தார்.

மஞ்சப்பை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனன், படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு, சொந்த ஊரான கொச்சிக்குப் போய் ஒரு மாதம் படித்து தேர்வு எழுதினார்.

இந்தத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார் லட்சுமி மேனன். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ரொம்ப லக்கி.

சினிமாவில் அதிர்ஷ்டம் இருந்தது, நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றன. அந்த அதிர்ஷ்டம் எனக்கு படிப்பிலும் இருக்கிறது.

நான் சாதாரணமாகத்தான் படித்தேன். சுமாராக எழுதினேன். நல்ல மார்க் வந்திருக்கிறது. மேலும் படிக்க ஆர்வமாக உள்ளேன்," என்றார்.

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.

Copyright © 2012. www.haihoi.com